தப்பியோடும் சிறிலங்காப் படையினர்?

news
கடந்த ஆண்டில் சிறிலங்கா இராணுவத்தை விட்டு 71,458 பேர் தப்பியோடியுள்ளதாக, சிறிலங்கா இராணுவத்தரப்பை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக வருடத்தின் முதற் காலாண்டில் விடுமுறையில் சென்று பணிக்குத் திரும்பத் தவறிய படையினரின் எண்ணிக்கையே இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 33,532 பேர் இராணுவ நடைமுறைகளின் கீழ், சிறிலங்கா இராணுவத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். 
 
இராணுவத்தை விட்டுத் தப்பியோடியுள்ள சிறிலங்காப் படையினரைத் தேடிப்பிடித்துக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
Tags: , , ,

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.